“விழி போல தமிழ்மொழியை காக்க வேண்டும்” கலெக்டர் கோவிந்தராஜ் பேச்சு
விழி போல தமிழ்மொழியை காக்க வேண்டும் என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நேற்று நடந்தது. பயிலரங்கத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உணர்விலும், உடலிலும் கலந்து விட்ட தமிழ்மொழியின் மாண்பை உலகறிய செய்யவும், எதிர்கால சந்ததியினருக்கு தமிழ்மொழியின் தொன்மையினை எடுத்துரைக்கவும், நாம் ஒவ்வொருவரும் முற்படவேண்டும். உணர்வை உள்ளபடியே வெளிப்படுத்தக்கூடிய ஒரு உன்னத மொழி தமிழ்மொழி.
பதினெட்டு கீழ்கணக்கு நூல்களாலும், பதினெட்டு மேல்கணக்கு நூல்களாலும் மனித வாழ்வில் அகம், புறம் என பிரித்து காட்டக்கூடிய ஒப்பற்ற இலக்கண, இலக்கிய செறிவுகளை கொண்ட உன்னத மொழியின் மாண்பை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். விழி போல தமிழ்மொழியை காக்க வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
பயிலரங்கத்தில் சிறந்த தமிழ்மொழி செயலாக்கம் செய்த மாவட்ட நிலை அலுவலர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் அவர் வழங்கினார். மேலும் தமிழ் அம்மா மென்பொருள் சொல்லாக்கம் குறுந்தகட்டினை கலெக்டர் வெளியிட்டார். பயிலரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கரூர் மாவட்ட தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனர் செந்தூர் மருதுபாண்டியன் வரவேற்று பேசினார். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story