பாபர் மசூதி இடிப்பை கண்டித்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட 150 பேர் கைது
பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
மனிதநேய ஜனநாயக கட்சியினர் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை முற்றுகையிட போவதாக திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜய்குமார், முருகன் ஆகியோர் தலைமையில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் ரெயில் நிலையம் முன்பும் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பகல் 12.30 மணி அளவில் மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சையத்முஸ்தபா, ஹாஜாசெரீப், ஷபீர்அகமத் ஆகியோர் தலைமையில் 150 பேர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது அவர்கள் பாபர் மசூதி இடித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு முற்றுகையிட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 150 பேரையும் கைது செய்தனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தாலுகா அலுவலகம் முன்பு பாபர் மசூதி இடிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முஸ்தாக் பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல்சுபான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையத்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இனாயத்துல்லா வரவேற்றார். மாநில பேச்சாளர் கிண்டி அன்சாரி கோரிக்கை குறித்து விளக்கி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட துணை தலைவர் அஸ்கர் பாஷா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story