பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி லால்பேட்டையில் கடை அடைப்பு


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி லால்பேட்டையில் கடை அடைப்பு
x
தினத்தந்தி 7 Dec 2017 3:15 AM IST (Updated: 7 Dec 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி லால்பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

காட்டுமன்னார்கோவில்,

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6–ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். அதே வேளையில் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் ஜமாத் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கருப்பு நாளாக கடைபிடித்து, அன்று ஒருநாள் அப்பகுதியில் கடை அடைப்பு நடத்தப்படும்.

அந்த வகையில் நேற்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஜமாத் சார்பில் கடை அடைப்பு நடைபெற்றது. இதையொட்டி லால்பேட்டை பஸ் நிலையம், காயிதே மில்லத் சாலை, சிதம்பரம் மெயின்ரோடு, பஜார் தெரு, தோப்பு தெரு, வடக்கு தெரு, கைக்காட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200–க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காட்டுமன்னர்கோவில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story