தஞ்சை அருகே லாரி மீது அரசு பஸ் மோதல் 14 பேர் படுகாயம்
தஞ்சை அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர்,
சேலத்தில் இருந்து அரசு பஸ் புறப்பட்டு நாகையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை நாகையை சேர்ந்த வரதராஜன்(வயது28) ஓட்டி வந்தார். பஸ்சில் 23 பேர் பயணம் செய்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1.45 மணி அளவில் தஞ்சை-நாகை சாலையில் வல்லத்தை அடுத்த ஆலக்குடி அருகே பஸ் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.
14 பேர் படுகாயம்
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. டிரைவர் வரதராஜன், கண்டக்டர் கோவிந்தசாமி மற்றும் 6 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story