ஆட்டத்தால் பதிலளிக்கும் வீரன்


ஆட்டத்தால் பதிலளிக்கும்  வீரன்
x
தினத்தந்தி 8 Dec 2017 9:00 AM IST (Updated: 7 Dec 2017 3:12 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் வசிப்பவர் 17 வயதான ஆடம் ரீட். இவர் ஹெரிடேஜ் பள்ளி கால்பந்து அணியின் முன்னணி வீரர். கால்பந்து என்றதும், கால்களால் விளையாடும் விளையாட்டை நினைத்துவிடாதீர்கள்.

மெரிக்காவில் வசிப்பவர் 17 வயதான ஆடம் ரீட். இவர் ஹெரிடேஜ் பள்ளி கால்பந்து அணியின் முன்னணி வீரர். கால்பந்து என்றதும், கால்களால் விளையாடும் விளையாட்டை நினைத்து விடாதீர்கள். ஆடம் விளையாடுவது, ‘அமெரிக்கன் புட்பால்’ (ரக்பி). உடல் வலிமையையும், ஓட்டத்திறனையும் அடிப்படையாக கொண்ட விளையாட்டு. பந்தை கடத்திச் செல்பவர்களை, இடித்து தள்ளி பந்தை எடுக்கும், முரட்டு விளையாட்டு. இதில் பொதுவாக வலுவான வீரர்களுக்கே வாய்ப்பு அதிகம். உயரமான, உடல் கட்டுமஸ்தான வீரர்களையே அணியில் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் ஆடம் வி‌ஷயத்தில் இந்த கொள்கை தளர்த்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஆடம் 4 அடி 5 அங்குல   உயரமே கொண்ட வீரர். இவரது உடல் எடையும் 43 கிலோதான்.

கம்பீரமான ஆட்கள் விளையாடும் மைதானத்தில், குள்ளமான ஆடம் விளையாடுவதை பார்ப்பவர்கள் சில சமயங்களில் சிரித்து விடுவார்கள். இவ்வளவு ஏன்? ஆடமை கூப்பிட்டு கிண்டல் அடித்த சம்பவங்களும் உண்டு. ஆனால் அவர்களின் கேலி–கிண்டலுக்கு ஆடம் விளையாட்டின் மூலம் பதிலடி கொடுக்கிறார். குள்ளமாக இருந்தாலும், ஆடம் ஆட்ட களத்தில் சீறிப் பாயக்கூடியவர். மின்னல் வேகத்தில் ஓடி பந்தை எல்லைக்கோட்டிற்குள் சேர்த்து விடுவார். அதனால் தான் குள்ளமான மனிதர் என்றாலும், ஆடமிற்கு அணியில் இடம் கிடைக்கிறது.

‘புது அணி, புது மனிதர்களைச் சந்திக்கும்போது நான் மோசமான கிண்டலுக்கு உள்ளாவேன். அதற்காக ஒருநாளும் கவலைப்பட மாட்டேன். அவர்களுக்கு என் ஆட்டத்தின் மூலம் மட்டுமே பதில் அளிப்பேன். அவர்கள் தானாகவே மரியாதையும், அன்பையும் கொடுப்பார்கள். என் உயரம் குறித்து எனக்குக் கவலை இல்லை. என்னால் நடக்க முடிகிறது; ஓட முடிகிறது; சிறந்த விளையாட்டு வீரராக இருக்க முடிகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?’ என்று கேட்கிறார் ஆடம்.

உருவம் சிறிதாக இருந்தாலும் ஆடமின் இதயம் மிக வலிமையானது; மிகவும் அன்பானது; எல்லோரையும் சரிசமமாக மதிக்கக்கூடியது’ என்கிறார்கள் அவரது பள்ளி நண்பர்கள்.

Next Story