தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் நேற்று காலை சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாம்பசிவன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமிநாதன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் வட்ட செயலாளர் ராஜபாண்டி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சிவசூரியன், பொருளாளர் முத்தையா ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ராதா கலந்து கொண்டு பேசினார்.
கோரிக்கைகள்ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஜாக்டோ–ஜியோ பொறுப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியத்தை மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
யார்–யார்?ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அர்ச்சுனபெருமாள் நன்றி கூறினார்.