நெல்லை அருகே பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது பொதுமக்கள் குடங்களில் பாலை பிடித்து சென்றனர்
நெல்லை அருகே பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் டேங்கரில் இருந்து சிந்திய பாலை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்.
நெல்லை,
நெல்லை அருகே பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் டேங்கரில் இருந்து சிந்திய பாலை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்.
பால் லாரிசங்கரன்கோவிலில் இருந்து மூன்றடைப்புக்கு ஒரு டேங்கர் லாரியில் 9 ஆயிரம் லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு சேலத்தை சேர்ந்த டிரைவர் சேகர் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். அந்த லாரி நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி வேப்பங்குளம் விலக்கில் வந்தபோது, பின்னால் வந்த அரசு பஸ் லாரியை முந்தி சென்றது. அப்போது அந்த வழியாக ஒரு மாடு வந்தது. அந்த மாட்டின் மீதும், பஸ்சின் மீதும் மோதாமல் இருக்க டிரைவர் லாரியை திருப்பினார்.
இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி டேங்கரில் இருந்த பால் ரோட்டில் சிந்தியது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் வீடுகளில் இருந்து குடங்கள், பாத்திரங்களை எடுத்து வந்து டேங்கரில் இருந்து சிந்திய பாலை பிடித்து சென்றனர். அந்த வழியாக கட்டிட வேலை, விவசாய வேலைக்கு சென்று வந்தவர்களும் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டு பாத்திரத்தில் பாலை பிடித்து சென்றனர்.
போலீசார் விசாரணைஇதுபற்றி தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த லாரியை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தூக்கினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
லாரி கவிழ்வதற்கு அந்த அரசு பஸ்தான் காரணம் என போலீசார் அந்த பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். லாரி கவிழ்ந்த இடத்துக்கு அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதிர்ஷ்டவசமாக அதில் லாரி மோதவில்லை. அதில் மோதி இருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும்.