பயணி தவறவிட்ட மணிபர்சை எடுத்துக் கொடுத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு
பெங்களூரூவில் இருந்து சென்னை சென்டிரல் வந்த ரெயிலில் பயணி தவறவிட்ட மணிபர்சை எடுத்துக் கொடுத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு.
சென்னை,
பெங்களூரூவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு தினமும் சென்னை மெயில் ரெயில் வருவது வழக்கம். கடந்த 22-ந்தேதி இந்த ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் வந்த போது பயணி ஒருவர் தனது மணிபர்சை காணவில்லை என்று பதறினார். பின்னர் கிடைக்காமல் வீட்டிற்கு சென்றார்.
அந்த பயணி வியக்கும் விதமாக காணாமல் போன அவரது மணிபர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து டிக்கெட் பரிசோதகர் பிரேந்திர குமார் எழுதிய கடிதம் கிடைத்தது. பர்ஸ்சை பெற்றுக்கொண்ட பயணி, டிக்கெட் பரிசோதகர் பிரேந்திர குமாரின் நேர்மை குறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கும், சென்னை கோட்ட மேலாளருக்கும் தகவல் கொடுத்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் குல்ஷ்ரஸ்தா, டிக்கெட் பரிசோதகர் பிரேந்திர குமாரின் நேர்மையை பாராட்டி அவருக்கு பாராட்டு சான்றிதழும் ரொக்கப் பரிசாக ரூ.2 ஆயிரமும் அளித்து கவுரவப்படுத்தினார்.
Related Tags :
Next Story