போலீஸ் பாதுகாப்புடன் ரெயில்வே தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது மறியலில் ஈடுபட்ட 16 பேர் கைது

கீரனூர் அருகே உள்ள சீத்தப்பட்டியில் ரெயில்வே தரைப்பாலம் அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தொடங்கியது. அப்போது பொக்லைன் எந்திரம் முன் மறியலில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீரனூர்,
கீரனூர் அருகே உள்ள களமாவூர் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஆள்இல்லாத ரெயில்வே கேட்டில் களமாவூர், சீத்தப்பட்டி ரெயில்வே கேட் அருகே தரைப்பாலம் அமைப்பதற்காக மதுரை ரெயில்வே கூடுதல் கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று முன்தினம் வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த களமாவூர், சீத்தப்பட்டி பொதுமக்கள் சீத்தப்பட்டியில் ரெயில்வே தரைப்பாலம் அமைத்தால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும், எங்கள் பகுதியில் இறந்தவர் களின் உடல்களை இறுதி சடங்குகள் செய்ய இந்த வழியாகத்தான் தூக்கி செல்ல வேண்டும். மேலும் விவசாய அறுவடை காலங்களில் கனரக வாகனங்களை இந்த வழியாக கொண்டு செல்ல முடியாது. எனவே சீத்தப்பட்டியில் தரைப்பாலம் அமைக்க கூடாது என கூறி தரைப் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பணியை தடுத்து நிறுத்தினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கலெக்டரிடம் பேசி முடிவெடுப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் திரண்டு நின்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் கலெக்டர் கணேஷ் உத்தரவின்பேரில் நேற்று தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆறுமுகம், பாலகுரு, கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் ராயப்பன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குளத்தூர் தாசில்தார் கலைமணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தரைப்பாலம் அமைப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தின் இருபுறமும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 16 பேர் பொக்லைன் எந்திரத்தின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத் தொடர்ந்து தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Tags :
Next Story