பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் கண்காணிப்பு கேமரா பழுது குற்றச்செயல்கள் அதிகரிப்பு


பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் கண்காணிப்பு கேமரா பழுது  குற்றச்செயல்கள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2017 4:00 AM IST (Updated: 8 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் கண்காணிப்பு கேமரா பழுது சரி செய்யப்படாததால் செயின் பறிப்பு, வாகன திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கடற்கரை பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க இங்குள்ள போலீஸ் பூத் எதிரே போலீசார் தரப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கேமரா பழுதானது. தற்போது வரை பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் கடற்கரை பகுதியில் செயின் பறிப்பு, வாகன திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருவதாகவும் கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்து செல்பவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கேமரா பழுதானதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர். எனவே, கண்காணிப்பு கேமராவை சரி செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story