ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பெரியநாயக்கன்பாளையம் அருகே புதிய ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பெ.நா.பாளையம்,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கியாஸ் கம்பெனி பஸ் நிறுத்தத்தில் இருந்து இடிகரைக்கு செல்ல தார்ச்சாலை உள்ளது. 15 அடி அகலம் கொண்ட இந்த தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. குறுகலான இந்த சாலையில் இரு சக்கர வாகனம், கார், பஸ் மற்றும் கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் லாரிகள் மற்றும் பெரிய கனரக வாகனங்கள் செல்லும் போது எதிரே வாகனம் வந்தால் ஒதுங்க கூட இடம் இல்லை. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலையை ஒட்டி தனியார் பள்ளி, நூல் மில்கள், பவுண்டரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன. கியாஸ் கம்பெனியில் இருந்து செல்லும் இந்த சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் ரெயில் தண்டவாளம் குறுக்கே செல்கிறது. இங்கு ஆள் இல்லாத ரெயில்வே கிராசிங் இருந்தது.
இந்த சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இடிகரையில் இருந்து பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வாரச்சந்தைகளுக்கு செல்லும் வியாபாரிகளின் நலன் கருதி போக்குவரத்து துறையின் அனுமதியுடன் 2 மினி பஸ்கள் இயங்கி வந்தன.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளில்லாத இந்த ரெயில்வே கிராசிங்கில் மினி பஸ் ஒன்று கடந்து செல்லும் போது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இங்கு ரெயில்வே கேட் அமைக்கப்பட்டது.
இங்கு ரெயில் வரும் நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும். அதன் பிறகு இந்த ரெயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதை செயல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. எனவே ரெயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் சுரங்கப் பாதை அமைக்க ரெயில்வே துறை திட்டமிட்டது. அதன்படி இந்த ரெயில்வே கேட் அமைக்கப்பட்டு இருந்த அதே இடத்தில், தண்டவாளத்தின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த சாலை மண்சாலையாக இருந்தது. இந்த சாலை பெரியநாயக்கன்பாளையம், நெ.2 கூடலுார் மற்றும் இடிகரை பேரூராட்சிகளின் எல்லைகளுக்குள் சென்று வருவதால் இதை சீரமைக்கவும், விரிவாக்கம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினரின் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரெயில்வே கேட் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. அதில் 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் சுரங்கப்பாதையின் இருபுறமும் ரோடு அமைத்து, சாலை இணைப்பு இன்னும் நடைபெறவில்லை. அந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால் அந்த ரெயில்வே கேட்டை பயன்படுத்தி வந்த லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச்சென்று மாற்றுப்பாதையை பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத அவல நிலை காணப்படுகிறது.
மேலும் மாற்றுப்பாதையும் களிமண் சாலையாக இருப்பதால் மழைக்காலங்களில் லாரிகள், சரக்கு வேன்கள் சேற்றில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. இதுதவிர இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் மாற்றுப்பாதை சாலையை சீரமைத்து, சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story