கும்மிடிப்பூண்டியில் ரெயில் மூலம் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மின்சார ரெயில்களில் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டைக்கும், நெல்லூருக்கும் செல்லும் மின்சார ரெயில்களில் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில், மின்சார ரெயில்களில் ஏறி இன்ஸ்பெக்டர் அங்கட்குமார் தலைமையில் ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 183 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் எடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, திருவள்ளூர் மாவட்ட பறக்கும் படை துணை வட்டாட்சியர் மணிவாசகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story