ஊட்டியில் போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை மறித்து போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை போக்குவரத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், 7-வது ஊதியக்குழு அமல்படுத்திய சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இயக்க தகுதியில்லாத அரசு பஸ்களை இயக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ்நிலையம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் செய்யது இப்ராஹிம் தலைமை தாங்கினார்.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தின் உள்பகுதியில் உள்ள பணிமனையில் இருந்து வெளியே வந்த அரசு பஸ்களை போக்குவரத்து ஊழியர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 1 மணி நேரம் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக 10 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. அதன் காரணமாக வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அவதி அடைந்தனர். இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் செய்யது இப்ராஹிம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களான டிரைவர்கள், கண்டக்டர்கள் தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும். ஆனால், ஊழியர்கள் 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய போக்குவரத்து அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். தற்போது அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் படி, சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதே போன்று போக்குவரத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும்.
கடந்த 1.4.2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைத்து போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்து கழகத்துக்கு அதிகமான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், காலாவதியான அரசு பஸ்களை இயக்குவதை நிறுத்த வேண்டும்.
இதுபோன்ற பஸ்களுக்கு பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை தகுதி சான்றிதழ் வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் சி.ஐ.டி.யு. கோவை மண்டல தலைவர் காளியப்பன், எல்.பி.எப். மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன், எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் லோகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story