மதுராந்தகம் அருகே நகைக்கடையின் சுவரில் துளை போட்டு கொள்ளை
மதுராந்தகம் அருகே நகைக்கடையின் சுவரில் துளை போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது
மதுராந்தகம்,
மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 35). அதே பகுதியில் நகைக்கடை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பின்புற சுவர் துளையிடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையில் இருந்த 7 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது
போலீசார் விசாரணை
இது குறித்து ஆனந்தன் படாளம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்குப்பதிவு செய்து கடையில் துளை போட்டு திருடியவர்கள் யார் என்று விசாரித்து வருகிறார். மோப்பநாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.
கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story