நாட்டில் தனிநபர் சுதந்திரம் கேள்விக்குறி ஆகியுள்ளது மந்திரி உமாஸ்ரீ கவலை
நாட்டில் தனிநபர் சுதந்திரம் கேள்விக்குறி ஆகியுள்ளது என்று மந்திரி உமாஸ்ரீ கவலையுடன் தெரிவித்தார்.
பெங்களூரு,
நாட்டில் தனிநபர் சுதந்திரம் கேள்விக்குறி ஆகியுள்ளது என்று மந்திரி உமாஸ்ரீ கவலையுடன் தெரிவித்தார்.
கேள்விக்குறி ஆகியுள்ளதுகன்னட சாகித்ய அகாடமி சார்பில் கலந்துரையாடல் மற்றும் திட்டங்கள் பற்றிய கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கன்னட வளர்ச்சித்துறை மந்திரி உமாஸ்ரீ கலந்து கொண்டு பேசியதாவது:–
நாட்டில் சமீபகாலமாக தனிநபர் சுதந்திரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. வெளிப்படையாக பேசுபவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதை தட்டி கேட்காவிட்டால் வரும் நாட்களில் தனிநபர் சுதந்திரத்தை இழக்க நேரிடும். ஏதாவது ஒரு விஷயம் பற்றி கருத்து தெரிவித்தால் அதை ஏற்கும் மனப்பக்குவம் ஆட்சியாளர்களுக்கு வேண்டும். ஆனால் அதை வைத்து தாக்குதல்கள் நடத்துவது என்பது சரியல்ல.
பின்விளைவுகளை...இதை எதிர்க்காமல் அமைதியாக இருந்தால் வரும் நாட்களில் அதற்கான பின்விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். சமகால பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடல் நடக்கிறது. இது நல்ல விஷயம். இத்தகைய கலந்துரையாடல்களை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உமாஸ்ரீ பேசினார்.
நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் பரகூரு ராமச்சந்திரப்பா பேசுகையில், “இன்றைய இளம் தலைமுறையினருக்கு இலக்கிய உலகிற்குள் எப்படி நுழைவது?, வரலாறுகளை எப்படி விமர்சிப்பது? என்பது தெரிய வேண்டும். அதன் அடிப்படையில் சாகித்ய அகாடமி இளம் தலைமுறையினருக்கு இதுபோன்ற நல்ல கருத்தரங்குகள், கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். வரலாறுகள் அதன் கருவறையிலேயே விமர்சிக்கப்படுகிறது. இத்தகைய ஆதங்கங்களை சாகித்ய அகாடமி போக்க வேண்டும். இந்திய இலக்கியத்திலும் மதம் மற்றும் அரசியல் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் அரசியல் மாண்புகள் குறைய தொடங்கியுள்ளது“ என்றார்.