மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: மகனுடன் ஓட்டல் ஊழியர் பலி மனைவி-மகள் படுகாயம்
ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் மகனுடன் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சைவமடத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது47), இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மணிவண்ணன் நேற்று காலை அவரது மனைவி சித்ரா(43), மகன் நித்திஷ்குமார் (5), மகள் நிவாஷினி (3) ஆகிய 4 பேருடன் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் திருமணம் முடிந்து ஒரத்தநாட்டிற்கு 4 பேரும் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை- தஞ்சை சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை மணிவண்ணன் ஓட்டினார். அவரது மனைவி சித்ரா, மகள் நிவாஷினி ஆகிய 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர். மகன் நித்திஷ்குமார் மணிவண்ணனுக்கு முன் (பெட்ரோல் டேங்கில்) அமர்ந்திருந்தார். இவர்கள் தெலுங்கன்குடிக்காட்டை அடுத்துள்ள குருமண்தெரு பாலத்தை கடந்து சென்றபோது எதிரே வந்த ஒரு தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணிவண்ணன் மற்றும் அவரது மகன் நித்திஷ்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சித்ரா மற்றும் நிவாஷினி ஆகிய 2 பேரும் படு காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான மணிவண்ணன், நித்திஷ்குமார் ஆகியோர் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சித்ரா, நிவாஷினி ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பஸ் மோதி தந்தை-மகன் பலியான பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story