பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நடுவழியில் நின்ற சரக்கு ரெயில்
நாகையில் சரக்கு ரெயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நடுவழியில் ரெயில் நின்றது. அதைதொடர்ந்து மாற்று என்ஜின் மூலம் பெட்டிகள் நாகை ரெயில் நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை அருகே மேலவாஞ்சூரில் காரைக்கால் தனியார் துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சரக்கு ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட சரக்கு ரெயில்களில் நிலக்கரி ஏற்றி செல்லப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து சேலத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் நாகை வெளிப்பாளையம் ரெயில்வே நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் ஒரு பெட்டியின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
இதில் 48 பெட்டிகள் துண்டிக்கப்பட்டு, வெளிப்பாளையம் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் நடுவழியில் நின்றுவிட்டது. ஆனால் மீதமுள்ள பெட்டிகளுடன் சரக்கு ரெயில் நாகை ரெயில் நிலையத்திற்கு சென்றடைந்தது. இதுகுறித்து சரக்கு ரெயில் டிரைவர் கொடுத்த தகவலின்பேரில் நாகூரில் இருந்து மாற்று ரெயில் என்ஜின் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து வெளிப்பாளையம் ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பெட்டிகள் மாற்று ரெயில் என்ஜின் மூலம் நாகை ரெயில் நிலையத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் காரைக்கால் - வேளாங்கண்ணி பயணிகள் ரெயில், திருச்சி - காரைக்கால் பயணிகள் ரெயில் தாமதமாக சென்றன.
இதனால் அரசு பணியாளர்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Related Tags :
Next Story