புற்றுநோய் சிகிச்சைக்கு நானோ தொழில்நுட்பம் உதவுகிறது அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் தகவல்


புற்றுநோய் சிகிச்சைக்கு நானோ தொழில்நுட்பம் உதவுகிறது அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2017 3:00 AM IST (Updated: 8 Dec 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

புற்றுநோய் சிகிச்சைக்கு நானோ தொழில்நுட்பம் உதவுவதாக அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் கூறினார்.

பெங்களூரு,

புற்றுநோய் சிகிச்சைக்கு நானோ தொழில்நுட்பம் உதவுவதாக அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் கூறினார்.

புற்றுநோய் சிகிச்சைக்கு...

கர்நாடக அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில் 9–வது நானோ தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நானோ தொழில்நுட்பம் குறித்த தொலைநோக்கு பார்வை குழு தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான சி.என்.ஆர்.ராவ் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:–

மருத்துவம் மற்றும் தொழில்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை அடுத்த தலைமுறையினருக்கு பயன்களை கொடுக்கும். புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்கு நானோ தொழில்நுட்பம் உதவுகிறது. புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு இந்த தொழில்நுட்பம் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

உடல் சுகாதாரத்தை...

மருத்துவ துறையில் 2 நானோ தொழில்நுட்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெங்களூரு நகர மக்கள் நல்ல சுற்றுப்புற சூழ்நிலையில் வாழவும், உடல் சுகாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் இந்த நானோ தொழில்நுட்பம் உதவுகிறது.

நாட்டின் அறிவியல் தலைநகரமாக பெங்களூரு திகழ்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது. வெளிநாடுகளுக்கு கர்நாடகம் முன் மாதிரியாக விளங்குகிறது. பெங்களூரு, சண்டிகர் ஆகிய 2 இடங்களில் நானோ தொழில்நுட்ப மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நான் இந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் பிறந்தவன். அதனால் உள்ளூர் மக்களுக்கு உதவும் வகையிலான நானோ தொழில்நுட்பத்தை உருவாக்க நான் முன்னுரிமை கொடுக்கிறேன்.

முதலீடுகள் செய்ய வாய்ப்புகள்

பெங்களூரு மையத்தில் நானோ தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி தொடங்கியுள்ளது. நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப நகரமாக இருக்கும் பெங்களூரு வரும் நாட்களில் நானோ தொழில்நுட்ப நகரமாகவும் பெயர் பெறும். இந்த நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு கர்நாடக அரசு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளது.

இவ்வாறு சி.என்.ஆர்.ராவ் பேசினார்.

மாநாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திட்ட செயலாக்கத்துறை மந்திரி சீதாராம் பேசுகையில், “நானோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த துறையில் அதிக முதலீடுகள் செய்ய வாய்ப்புகள் குவிந்துள்ளன. வரும் நாட்களில் நானோ தொழில்நுட்பத்தின் தலைநகரமாக பெங்களூரு மாறும். இந்த நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு கர்நாடக அரசு தேவையான ஒத்துழைப்பை வழங்குகிறது“ என்றார்.


Next Story