பாந்திராவில், 24–வது மாடியில் இருந்து குதித்து கட்டுமான அதிபரின் வீட்டு வேலைக்காரர் தற்கொலை
பாந்திராவில் கட்டுமான அதிபர் வீட்டில் வேலை பார்த்து வந்த நேபாள நாட்டு வாலிபர் 24–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,
பாந்திராவில் கட்டுமான அதிபர் வீட்டில் வேலை பார்த்து வந்த நேபாள நாட்டு வாலிபர் 24–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
வேலைக்கார வாலிபர்மும்பை பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த கட்டுமான அதிபர் ஒருவரின் வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த பரத் புத்தா(வயது28) என்ற வாலிபர் தனது உறவினர் ஒருவருடன் வீட்டு வேலை செய்து வந்தார். இருவரும் கட்டுமான அதிபர் வசித்து வரும் கட்டிடத்தின் 24–வது மாடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தனர்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சாப்பிட்டு விட்டு வருவதாக பரத் புத்தா வீட்டில் இருந்து வெளியே வந்து உள்ளார்.
குதித்து தற்கொலைபின்னர் திடீரென அவர் 24–வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். சத்தம்கேட்டு ஓடிவந்த கட்டிட காவலாளி, பரத் புத்தா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணைபரத் புத்தா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. அவர் கடந்த ஒரு மாதமாக மனஉளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பரத் புத்தாவின் குடும்பத்தினர் நேபாளத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.