புனேயில் காவலாளியை தாக்கி ஏ.டி.எம். எந்திரத்தில் துளைபோட்டு ரூ.9 லட்சத்து 86 ஆயிரம் கொள்ளை
புனேயில் காவலாளியை தாக்கி, ஏ.டி.எம். எந்திரத்தில் துளைபோட்டு ரூ.9 லட்சத்து 86 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
புனே,

காவலாளியை தாக்கி...
புனே லோனவாலா பகுதியின் பிரதான மார்க்கெட் பகுதியில் பாங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு காவலாளி சுரேஷ் கப்சி (வயது 65) என்பவர் பணியில் இருந்தார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் மர்ம ஆசாமிகள் சிலர், காரில் அங்கு வந்தனர். ஏ.டி.எம். மையத்தை நெருங்கிய அவர்கள், காவலாளி சுரேஷ் கப்சியை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால், அவர் மயக்கம் அடைந்தார்.
ரூ.9 லட்சத்து 86 ஆயிரம்
பின்னர், கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தில் துளைபோட்டு அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை சர்வ சாதாரணமாக கொள்ளையடித்து விட்டு, அதே காரில் தப்பினர். மயக்கம் தெளிந்ததும், சம்பவம் குறித்து போலீசாருக்கு காவலாளி தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வங்கி அதிகாரிகளும் வந்தனர். விசாரணையில், ரூ.9 லட்சத்து 86 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story