தொண்டி மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை
தொண்டி மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை வனத்துறை அலுவலர்கள் கைப்பற்றி மீண்டும் கடலில் விட்டனர்.
தொண்டி,
தொண்டி மகாசக்திபுரம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் கனி (வயது 40), மீனவர். இவர் தொண்டி கடற்கரையில் கரை ஓரத்தில் வலையை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது இவருடைய வலையில் அரிய வகை கடல் ஆமை ஒன்று சிக்கி உள்ளது. கரை திரும்பிய மீனவர் இதுகுறித்து மகாசக்திபுரம் மீனவ கிராம தலைவர் காளிதாசிடம் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து காளிதாஸ் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேட்டைத்தடுப்பு காவலர்கள் செல்வராஜ், அய்யர் பிச்சை ஆகியோர் மீனவர் கனியிடம் இருந்த அரிய வகை கடல் ஆமையை கைப்பற்றி மீண்டும் தொண்டி கடலில் விட்டனர்.
அப்போது அங்கு கூடியிருந்த மீனவர்களிடம் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது அரசால் தடை செய்யப்பட்டுள்ள கடல் வாழ் உயிரினங்கள் ஏதும் வலையில் சிக்கினால் அவற்றை உடனே கடலில் விட்டு விடவேண்டும் என்றும் அவற்றை எவ்வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும் கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கினால் உடனடியாக வன த்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Related Tags :
Next Story