அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை


அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 8 Dec 2017 5:07 AM IST (Updated: 8 Dec 2017 5:07 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினார்கள். பல்கலைக்கழகம் புதுவை காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு

புதுச்சேரி,

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினார்கள்.

புதுவை காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பேராசிரியர் நளினி ஜே.தம்பி மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் பொறுப்பு பதிவாளர் தரணிக்கரசு, துணை பதிவாளர் முரளிதாசன், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

டி.என்.பாளையத்தில் மணவெளி தொகுதி பா.ஜ.க. சார்பில் துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சக்திபாலன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், பொதுச்செயலாளர் சுகுமாறன், செயலாளர்கள் சிவகுமார், வீரபாலன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகத்தினர் மண்டல செயலாளர் அறிவழகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுவை நகராட்சி திராவிடர் கழக தலைவர் ஆறுமுகம், செயலாளர் கண்ணன், உழவர்கரை நகராட்சி திராவிடர் கழக தலைவர் துளசிராமன், அமைப்பாளர் சிவராசன், இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி அருகில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாணவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் தலைவர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார்.

மோதிலால் நேரு பாலிடெக்னிக் முதல்வர் உதயகுமார், நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி முதல்வர் வசந்த், விவேகானந்தா கோச்சிங் சென்டர் வி.சி.சி.நாகராஜன், காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு சரவணன், பிரேம், மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

புதுவை மாநில டாக்டர் அம்பேத்கர் மறுமலர்ச்சி கழகம் சார்பில் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் அம்பேத்கரின் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதன்பின் புதுவை பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அருந்ததியர் மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தவமணி தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் தலைவர் வாழுமுனி மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், ஆறுமுகம், மாணிக்கம், வடிவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆதிதிராவிடர் விடுதலை இயக்கத்தினர் தலைவர் வரத.காளிதாஸ் தலைமையில் ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பினர் தலைவர் ராம்குமார் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் புருஷோத்தமன், சக்திவேல், தனபால், வீரப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story