சிவகிரியில் பரிதாபம் அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்தவர் உடல் கருகி சாவு
சிவகிரியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்தவர் உடல் கருகி இறந்தார்.
சிவகிரி,
சிவகிரியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்தவர் உடல் கருகி இறந்தார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வியாபாரி
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஜெயகுரு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 47), இவருடைய மனைவி மாரியம்மாள். சேகர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்துக்கு அவருடைய மனைவியும் உதவி செய்து வந்தார். இதுதவிர இவர், ‘லவ் பேர்ட்ஸ்‘ என்ற பறவைகளை ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் சிவகிரிக்கு சேகர் வந்துள்ளார். நேற்று சிவகிரி ஊருக்கு தெற்கே தென்கால் கண்மாய் பகுதியில் மின்கம்பத்தில் உள்ள ஒயர்களில் ஏராளமான சிட்டுக் குருவிகள் அமர்ந்து இருந்தன.
உடல் கருகி சாவு
இதைக்கண்ட சேகர், ஒரு கம்பால் அந்த சிட்டுக்குருவிகளை விரட்டியதாக தெரிகிறது. அப்போது அந்த பகுதியில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காத சேகர், அந்த மின்கம்பியில் மிதித்துள்ளார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Tags :
Next Story