தாலுகா அலுவலகங்களில் பொது வினியோகத்திட்ட முகாம் இன்று நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று(சனிக்கிழமை) பொது வினியோகத்திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று(சனிக்கிழமை) பொது வினியோகத்திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுவினியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
சிறப்பு முகாம்
பொது வினியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் பிரதி மாதம் 2-வது சனிக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான (டிசம்பர்) முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை அனைத்து தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.
இந்த முகாம்களில் ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன ஸ்மார்ட் கார்டை மீண்டும் பெறுதல், ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்டவை செய்யப்படும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேற்பார்வை அலுவலர்கள்
அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மேற்பார்வை அலுவலர்கள் முன்னிலையில் முகாம் நடைபெறும். அதன்படி, தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு அந்த வருவாய் கோட்டத்தின் உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளரும், திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அந்த வருவாய் கோட்டத்தின் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்திற்கு தூத்துக்குடி தனித்துணை கலெக்டரும் (முத்திரை), கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு அந்த கோட்டத்தின் உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளரும், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும் மற்றும் கயத்தாறு தாலுகா அலுவலகத்திற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story