பணம் தர மறுத்தவருக்கு கத்திக்குத்து 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஆவடியில் பணம் தர மறுத்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது. 3 பேரை போலீஸ் தேடுகிறது.
ஆவடி,
ஆவடியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). இவர் அதே பகுதியில் இறந்தவர் உடலை வைக்கும் பிரீசர் பெட்டிகளை வைத்து தொழில் செய்கிறார். இவரது அலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் அதே பகுதியை சேர்ந்த ராமன் (26), யாசீன் (25) ஆகியோர் சென்று ரூ.10 ஆயிரம் கேட்டனர்.
பாஸ்கர் பணம் தர முடியாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும் அங்கிருந்த கண்ணாடி டீ டம்ளரை தூக்கி வீசினர். இதில் பாஸ்கர் கடையில் வேலை செய்து வந்த ஜலால் (38) காயம் அடைந்தார். உடனே 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அன்று இரவு 9 மணிக்கு ராமன், யாசீன் மற்றும் ஒருவர் சேர்ந்து பாஸ்கர் வீட்டுக்கு சென்று உன்னால்தான் எங்களை போலீஸ் தேடுகிறது என்று கூறி கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த பாஸ்கர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமன் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story