மாநில திட்டக்குழு உறுப்பினர் ஆய்வு


மாநில திட்டக்குழு உறுப்பினர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2017 4:00 AM IST (Updated: 9 Dec 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் வீடு, வீடாக சென்று சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளரும், மாநில திட்டக்குழு உறுப்பினர் அனில் மேஷ்ராம், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சுந்தரவல்லி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீடு, வீடாக சென்று சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

அப்போது அவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மணிலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Next Story