மோட்டார் சைக்கிள் மீது பால்டேங்கர் லாரி மோதல்: பெண் விஞ்ஞானி கணவருடன் உடல்நசுங்கி சாவு
விபத்தில் பெண் விஞ்ஞானி தனது கணவருடன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
மும்பை,
விபத்தில் பெண் விஞ்ஞானி தனது கணவருடன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
பெண் விஞ்ஞானி
மும்பை சயான்- பன்வெல் நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று காலை ஒரு தம்பதி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவண்டி பகுதியில் வந்ததும் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர் மனைவியை இறக்கி விடுவதற்காக சாலையோரம் நிறுத்தினார். அப்போது, அந்த வழியாக வந்த பால்டேங்கர் லாரி ஒன்று மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது. இதில் கணவர், மனைவி இருவரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த கோவண்டி போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பலியான பெண் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்ததும், அவரது கணவர் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
குர்லா நேரு நகரில் வசித்து வந்த அவர்களுக்கு 19 வயதில் என்ஜினீயரிங் படிக்கும் ஒரு மகன் இருக்கிறார்.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பால்டேங்கர் லாரி டிரைவரான நவிமும்பையை சேர்ந்த யோகேஷ் (வயது34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story