பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி போலீசாரிடம் சிக்கினார்


பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி போலீசாரிடம் சிக்கினார்
x
தினத்தந்தி 9 Dec 2017 4:14 AM IST (Updated: 9 Dec 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

பரோலில் சென்று தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி போலீசாரிடம் சிக்கினார்.

தானே,

பரோலில் சென்று தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி போலீசாரிடம் சிக்கினார்.

தலைமறைவு

தானே, ஐரோலி பகுதியை சேர்ந்தவர் சுஜித்(வயது35). இவர் கல்வா, விட்டவா பாலம் அருகே கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தீபக் பாட்டீல் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. சுஜித் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவர் கடந்த ஜூன் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலுக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டார்.

போலீசாரிடம் சிக்கினார்

இதையடுத்து போலீசார் கடந்த 6 மாதமாக அவரை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் சுஜித் ஐரோலி, வன்ராய் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது குடும்பத்தினரை பார்க்க வந்த சுஜித்தை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து போலீசார் கைதான சுஜித்தை நாக்பூர் மத்திய சிறைத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Next Story