வன தேவதை!
சுற்றுச்சூழல், வன உயிரினங்களைக் காப்பதற்கு தன்னைத் தானே அர்ப்பணித்துக் கொண்ட போராளியாகத் திகழ்கிறார், காரா தேஜ்பால். ஆனால், “அர்ப்பணிப்பு’ என்பதெல்லாம் பெரிய வார்த்தை. நாம் வாழும் பூமியை காக்க வேண்டும் என்று பாடுபடுவதில் என்ன பெருமையிருக்க முடியும்?” என்கிறார், எளிமையாக.
டெல்லி பெண் காரா தேஜ்பாலின் பேட்டி...
பிராணிகளை பிடிக்கும்
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பிராணி களைப் பிடிக்கும், வெளியிடங்களில் பொழுதைக் கழிக்கவும் விரும்புவேன். ஆரம்பத்தில், டெல்லியில் உள்ள பழமையான விலங்குக் காப்பகமான பிரண்டிகோஸ் அருகே எங்கள் வீடு இருந்தது. அங்கே ஆசை ஆசையாய் சென்று விலங்குகளுடன் விளையாடுவேன். எங்கள் வீடும் கூட ஒரு விலங்குகள் சரணாலயம்தான். நாய், பூனை, அணில், ஏன், பாம்பைக் கூட நான் வீட்டுக்கு எடுத்துவருவதை என் பெற்றோர் எதுவும் சொன்னதில்லை. இப்படி, விலங்குகளுடனான எனது பந்தம் இயல்பாகத் தொடங்கியது. உலகளாவிய விலங்கு நேசர்களைப் பற்றிப் படித்ததும் நிறையப் புரிந்துகொள்ள உதவியது. விலங்குகளுடன் உறவாட ஒரு கால்நடை மருத்துவராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை உணர்த்தியது. பள்ளிப் படிப்பை முடித்ததும் வீட்டில் சும்மாயிருந்த ஓராண்டு காலத்தில் வனவிலங்குகளைக் காக்கும் ஒரு நிறுவனத்துடன் பணிபுரிந்தேன். அமெரிக்காவில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கிய நான், ஒருகட்டத்தில் அதைத் துறந்து இந்தியாவுக்குத் திரும்பி சுற்றுச்சூழல், வனவிலங்குகளைக் காக்கும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினேன்.
எனக்கு ஊக்கமாக இருப்பவர்கள்
வனவிலங்கு பாதுகாப்புப் பணியில் சாதனை புரிவது என்பது அரிதானது. விடாமுயற்சியுடன் கூடிய தொடர் உழைப்பும், மாறாத நகைச்சுவை உணர்வும் இங்கே முக்கியம். நான் பல மூத்த வனவிலங்கு காப்பாளர்களை பெரிதும் மதிக்கிறேன் என்றாலும், இப் பணியில் ஈடுபட்டிருக்கும் எனது சமவயதுக்காரர்கள் பலரே எனக்கு ஊக்கமாக இருக்கின்றனர். அப்படி, அருணாசல பிரதேசத்தில் பணிபுரியும் நந்தினி வெல்ஹோ, ஒடிசாவின் ஆதித்யா பண்டா, மராட்டியத்தின் ரோகீத் கரோ, டெல்லியின் நேகா சின்கா ஆகியோரை எனக்குப் பெரிதும் ஊக்கமாகவும், முன்மாதிரியாகவும் திகழ்பவர்கள் என்று கூறலாம்.
குறுகிய பார்வை கிடையாது
வன உயிரினங்களில் எந்த உயிரினத்தைக் காப்பதில் நான் அதிக அக்கறை காட்டுகிறேன் என்று கேட்டால் என்னால் பதில்கூற முடியாது. ஒரு குறிப்பிட்ட வகை உயிரினம், ஒரு குறிப்பிட்ட பகுதி, ஒரு குறிப்பிட்ட பிரிவு பாதுகாப்பு என்று வன வாழ்வைக் காக்கும் எனது ஆர்வத்தை நான் எப்போதும் குறுக்கிக் கொண்டதில்லை. பூச்சிகள் முதல் புலிகள் வரை, பாலைவனங்கள் முதல் காடுகள் வரை, வனவிலங்கு ஆராய்ச்சி முதல் அங்கு மனிதர்கள் புரியும் குற்றங்கள் வரை எல்லாவற்றிலும் நான் கவனம் செலுத்துகிறேன்.
இந்தியர்கள் அறியவேண்டிய இயற்கைப் பாரம்பரியம்
இந்தியர்களாகிய நாம் நமது இயற்கைப் பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இந்தியா உலகின் 17 மிகப் பெரிய பல்லுயிர் மண்டலங்களில் ஒன்று. நமது காடுகளில் வெறும் 4.89 சதவீதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதியின் கீழ் வருகிறது. அதில், தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், காப்புக் காடுகள், சமூக காப்புக் காடுகள் போன்றவை அடங்கும். ஆனால் இவையும்கூட மனிதர்களின் ஊடுருவல்கள், அத்துமீறல்களால் பாதிக்கப்படுகின்றன. நம் காடுகளைக் காப்பவை விலங்குகள்தான். விலங்குகளால் காக்கப்படும் காடுகளே நமக்கான நீர், காற்று ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளன என்பதை உணர்ந்து வனவிலங்குகளைப் பாதுகாத்திட வேண்டும்.
இயற்கையின் மடியில்...
இயற்கையின் மடியில் இருப்பதே எனக்கு ஆறுதலும், தேறுதலும் தரும் விஷயம். இயற்கையே எனது கவலைகளுக்கு மருந்தாகிறது. என் வாழ்வில் ஒவ்வோர் ஆண்டும் அப்படிப்பட்ட இனிய கணங்களுக்குக் குறைவே இல்லை. இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் பவால்கர் காப்புக் காட்டுப் பகுதியில் சில நாட்கள் கழித்தேன். புத்துயிர் அளிக்கப்பட்டிருக்கும் ஹாத்திகாலியார் புல்வெளிப் பகுதியில் வனக் காவலர்கள், அதிகாரிகள், சக வன உயிரினக் காப்பாளர் களுடன் ஒருநாள் நடை போட்டேன். மாலை மயங்கும் அவ்வேளையில் அங்கு நான் கண்ட விலங்குகளின் காலடித் தடங்கள், ஓசைகள் ஆகியவை இப்போதும் என் நெஞ்சில் நீங்காதிருக்கின்றன.
தற்போதைய திட்டப்பணிகள்
வனஉயிரினக் காப்பு தொடர்பான பல திட்டப் பணிகளில் தற்போது நான் ஈடுபட்டிருக்கிறேன். அவற்றில், அடிப்படை நிலையில், வன உயிரினங்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் காப்பாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டமும் அடங்கும். அவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்றாலும், யாரையும் அதிகம் வெளியே தெரியாது, உரிய ஆதரவும் கிடைப்பதில்லை. எனவே அவர்களுக்குக் கைகொடுக்க நினைக்கிறோம்.
வாழ்வும், தேர்ந்தெடுத்த பாதையும்
வன உயிரினங்களுடன் எனது வாழ்க்கை, நான் தேர்ந்தெடுத்த பாதை குறித்து அதிகம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆனால் நான் ஏதோ அதிகம் கஷ்டப்படுவது போலவும், என் வாழ்க்கையையே தியாகம் செய்திருப்பது போலவும் அக்கேள்விகளில் அர்த்தம் தொனிக்கிறது. நிஜத்தில் அவ்வாறில்லை. விலங்குகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் சிந்தித்ததே இல்லை. அதாவது, இது எனக்கு இயல்பாக வருகிறது. வன உயிரின வாழ்வும், காடுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும், சிறிதும் சீண்டப்படாத இயற்கைச் சூழல் கற்பிக்கும் பாடங்கள் பிடிக்கும். நாம் ரொம்பவும் நேசிக்கும் விஷயத்தை பாதுகாத்து பத்திரமாக வைத்திருக்க நினைப்பது இயற்கைதானே? நான் என் வாழ்க்கையை விட்டுக் கொடுக்கவில்லை. அதை என் விருப்பப்படி என் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் நிறையப் பயணிக்கிறேன், எண்ணற்ற அசாதாரண மனிதர்களையும் சந்திக்கிறேன்.
நாளைய நம்பிக்கை
நான் இயல்பாகவே நம்பிக்கையான நபர். எனவே, பூமியின் எதிர்கால சுற்றுச்சூழல், வனஉயிரினச் சூழல் குறித்து எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நான் பார்க்கும் சில படங்கள் அந்த நம்பிக்கையை ரொம்பவே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. நான் சிறுவயதில் பார்த்த, கால்கள் இரண்டும் வேட்டைக்காரர்களால் துண்டிக்கப்பட்ட யானை, சமீபத்தில் பார்த்த, உயிரோடு கொம்பு வெட்டி எடுக்கப்பட்டு, உயிர்ப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு காண்டாமிருகம்... இப்படி. இம்மாதிரியான படங்களைப் பார்க்கும்போது விரக்தி என்னுள் நிரம்புகிறது, வேட்டைக்காரர்களின் கொடூரத்தை நினைத்து நினைத்து மாய்ந்து போகிறேன். ஆனால் இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பவர்கள்தான் எனக்கு நம்பிக்கை தருகின்றனர். நம் நாடு, அளவிட முடியாத அளவு அழகானது, இன்னும் விலங்குகள் வசிக்கும் அளவு காடுகள் கொண்டது. ஆக, எனது நம்பிக்கை அவ்வப்போது மங்கினாலும், இன்னும் முழுமையாக மறைந்துவிடவில்லை.
இவரைப் போன்ற வன தேவதைகளின் முயற்சியால், வன உயிரினங்களின் வாழ்க்கை காக்கப்படும் என்று நம்புவோம்.

Related Tags :
Next Story