உலக அழிவு... நியூட்டனின் கணிப்பு


உலக அழிவு... நியூட்டனின் கணிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2017 1:00 PM IST (Updated: 9 Dec 2017 12:06 PM IST)
t-max-icont-min-icon

உலகம் என்னும் அழகான பந்தை கண்மூடித்தனமாக சீர்குலைத்து வருவதாலோ என்னவோ, அதன் அழிவு குறித்த அச்சம் மனிதனுக்கு எப்போதும் இருக்கிறது.

லகம் என்னும் அழகான பந்தை கண்மூடித்தனமாக சீர்குலைத்து வருவதாலோ என்னவோ, அதன் அழிவு குறித்த அச்சம் மனிதனுக்கு எப்போதும் இருக்கிறது.

அது பற்றிய எச்சரிக்கைகளையும் தகவல்களையும் அவ்வப்போது பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலக முடிவு எப்போது என்பது குறித்த தடாலடி தகவல்களை விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் பதிவு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த கணிப்புகளை நியூட்டன் 1704-ம் ஆண்டு காலகட்டத்தில் குறித்துவைத்திருக்கிறார்.

அதில், பெருமைக்குரிய ரோமானியப் பேரரசு உருவாகி 1260 ஆண்டுகள் முடிவடையும் காலகட்டத்தில், அதாவது 2060-ம் ஆண்டு உலக முடிவு துவங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பைபிளில் உள்ள தீர்க்கதரிசி டானியேலின் வசனங்களை ஆராய்ந்து நியூட்டன் தனது கணிப்புகளை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் நியூட்டன் பைபிள் வசனங்களை ஆராய்ந்து எப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்பது 300 ஆண்டுகள் கடந்தும் மர்மமாகவே உள்ளது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நியூட்டன் தனது குறிப்பில், ‘முடிவு நெருங்கும் நிலையில் பல தீர்க்கதரிசிகளும் தங்களது கருத்துகளை உலக மக்களின் முன்பு வைப்பார்கள். ஆனால் அவர்களின் கணிப்புகள் அனைத்தும் தோல்வியில் முடியும். அத்துடன், கொள்கை அற்ற தேசங்களால்தான் உலக அழிவு துவங்கும். உலக அழிவுக்கு முன்னர் யூதர்கள் தங்கள் அடிமை விலங்கை உடைத்து சொந்தத் தேசம் திரும்புவர்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஆய்வாளர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் நடக்கும் அனைத்து விஷயங்களும் நியூட்டனின் கணிப்பை பிரதிபலிக்கின்றன என்கிறார்.

மேலும், சுமார் 50 ஆண்டுகாலம் ஆராய்ந்த கணிப்புகளை நியூட்டன் 4 ஆயிரத்து 500 பக்கங்களில் பதிவுசெய்துள்ளார் எனவும், ஆனால் ஒரு முடிவுரையை எழுதாமல் விட்டுவிட்டார். எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பீதியை கிளப்புறாங்கப்பா!

Next Story