கிராமத்தில் வசித்தால் 46 லட்ச ரூபாய்!
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் தமது குடும்பத்துடன் வசிப்போருக்கு ரூ. 46 லட்சம் வழங்கிட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் லூக்கர்பாட் பகுதியில், 240 பேர் வசிக்கும் அல்பினன் என்ற சிறிய கிராமம் அமைந்திருக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தில் வசித்து வந்த நிரந்தரக் குடிமக்கள், குறிப்பாக இளந்தலைமுறையினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 8 குழந்தைகள் அடங்கிய மூன்று குடும்பத்தினர் அக்கிராமத்தில் இருந்து வெளியேறியதன் விளைவாக அங்குள்ள பள்ளிக்கூடத்தை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டதாக கிராம நிர்வாக சபையின் தலைவர் தலைவர் பீட் ஜோஸ்ட் தெரிவித்திருந்தார்.
எனவே கிராமத்தின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கிராம நிர்வாக சபையை வலி யுறுத்தி வந்தனர்.
அதைத் தொடர்ந்துதான், தங்கள் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி, அக்கிராமத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வசிக்கவரும் குடும்பத்தின் பெரியவர்களுக்கு தலா ரூ. 16 லட்சம், குழந்தைகளுக்கு தலா 6 லட்சம் என 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சராசரியாக ரூ. 46 லட்சம் வரை நிதியுதவி வழங்க முடிவு செய்துவிட்டனர்.
ஆனால் அதேநேரம், சில விதிமுறைகளையும் அவர்கள் வகுத்திருக்கின்றனர்.
அதாவது, குடும்பத் தலைவரின் வயது அதிகபட்சம் 45 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது கிராமத்தில் வசிக்க வேண்டும்.
மற்றொரு முக்கியமான நிபந்தனையும் இருக்கிறது. அது, கிராமத்தில் குடியேறு பவர் சொந்தமாக இடம் வாங்க வேண்டும். அந்த இடத்தின் மதிப்பு குறைந்தது ரூ. 1.31 கோடியாக இருக்க வேண்டும். அந்த விலாசமே நிரந்தர விலாசமாக இருக்க வேண்டும்.
ஒருவேளை, 10 ஆண்டுகளுக்குள்ளாக கிராமத்தை விட்டு வெளியேறினால், தாம் பெற்ற ரூ. 46 லட்சத்தை திருப்பி அளிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்துக்காக முதல்கட்டமாக ரூ. 65 லட்சத்தை கிராம சபை ஒதுக்கியுள்ளது.
ரோன் பள்ளத்தாக்கில் இருந்து 1300 அடி உயரத்தில், சுகமான தென்றல் காற்று வீசும் மலைகளுக்கு இடையில் அமைந்திருக்கும் இந்த அழகிய கிராமத்தில் அதிக வேலைவாய்ப்புகள் இல்லை என்றாலும், விஸ்ப், சியான் போன்ற நகரங்கள் அங்கிருந்து அரைமணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story