அரியலூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது

அரியலூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 10 Dec 2017 4:15 AM IST (Updated: 10 Dec 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) சுப்ரமணியராஜா தொடங்கி வைத்தார். இதில் நீச்சல், ஆக்கி, டென்னிஸ், கூடைப்பந்து, மேஜை பந்து, கபடி, இறகுபந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. நீச்சல் போட்டியில் முதல் இடம் பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடகளம், கபடி போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுபவர் களுக்கு பரிசுகள் வழங்கப் படுகிறது. 

Next Story