புழல், செங்குன்றம் பகுதியில் தொடர் கொள்ளை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
மாதவரம், புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் கொள்ளையர்களை பிடிக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம், புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 12–க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து உள்ளது. இந்த தொடர் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுதொடர்பாக வடசென்னை வடக்கு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று மாதவரம் சாஸ்திரி நகரில் நடைபெற்றது. கூட்டம் சாஸ்திரி நகர வியாபாரிகள் சங்க தலைவர் சாம்புகோஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கொளத்தூர் ரவி, நிர்வாகிகள் ஜெயசங்கர், அருண் கலியமூர்த்தி, குழந்தைவேல், ரமேஷ் பத்மநாபன் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற திங்கட்கிழமைக்குள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்கவில்லை என்றால் கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story