நெல்லை பேட்டையில் நடுரோட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி; பொதுமக்கள் கடும் அவதி
நெல்லை பேட்டையில் நடுரோட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
பேட்டை,
நெல்லை பேட்டையில் நடுரோட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கூட்டு குடிநீர் திட்டம்
நெல்லை மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு பாபநாசம் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் தாமிரபரணி ஆற்றில் இருந்து நெல்லை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டமான, அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
பகிர்மான குழாய்கள்
இந்த திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது. அரியநாயகிபுரம் தாமிரபரணி ஆற்றுக்குள் உறைகிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் நெல்லை பேட்டையில் உள்ள காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் கொண்டு வரப்படு கிறது. அங்கிருந்து நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களுக்கு பிரித்து வினியோகம் செய்யப் படுகிறது.
இதற்கு அரியநாயகிபுரத்தில் இருந்து பேட்டை வரை குழாய்கள் பதிக்கப்பட்டதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் பேட்டை பகுதிக்குள் பகிர்மான குழாய் கள் பதிப்பதில் தற்போது பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எந்த ஒரு இடத்திலும் குடிநீர் குழாய்கள் பதித்தால் சாலை ஓரத்தில் மட்டும்தான் பதிப்பது வழக்கம். ஆனால் பேட்டையில் ரோடு மிகவும் குறுகலாக இருப்பதோடு, பக்க வாட்டிலும் சிறிதளவு கூட இடம் இல்லை.
நடுரோட்டில் குழாய்கள் பதிப்பு
எனவே அதிகாரிகள் நடுரோட்டில் பள்ளம் தோண்டி குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சொல்ல முடியாத அளவுக்கு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
பேட்டை தீயணைப்பு நிலையம், முனிசிபல் பஸ் நிறுத்தம், போலீஸ் நிலையம், ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் வரையில் நடுரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து பிரச்சினை
இதையொட்டி போலீசார் ஆய்வு நடத்தி போக்குவரத்தை மாற்றம் செய்தனர். சேரன்மாதேவி, கடையம், இடைகால், முக்கூடல் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், வாகனங்கள் நெல்லை பேட்டை ரெயில்வே கேட்டை கடந்து இடதுபுறமாக திரும்பி செல்கின்றன. அதாவது ம.தி.தா. இந்து கல்லூரி, திருப்பணி கரிசல்குளம் வழியாக பழைய பேட்டை துணை மின் நிலையம் அருகில் தென்காசி ரோட்டில் ஏறி பழைய பேட்டை, வழுக்கோடை வழியாக நெல்லை சந்திப்பு மற்றும் பிற பகுதிகளுக்கு செல்கின்றன.
மறு மார்க்கத்தில் நெல்லை சந்திப்பு, டவுன் வழியாக செல்லும் வாகனங்கள் ரொட்டிக்கடை முக்கில் இருந்து நேராக சென்று பேட்டை -பழைய பேட்டை இணைப்பு சாலையில் சிறிது தூரம் சென்று பழைய பேட்டை துணை மின் நிலையத்துக்கு பின்புறமாக திருப்பணிகரிசல்குளம் ரோடு, ம.தி.தா. இந்து கல்லூரி வழியாக பேட்டை ரெயில்வே கேட்டை அடைந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.
இதனால் தினமும் பேட்டையின் மையப்பகுதியில் உள்ள மக்கள் முற்றிலும் போக்குவரத்து வசதி இன்றி முடங்கி போய் உள்ளனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ள ரோடு மிகவும் குறுகலாக இருக்கிறது. இதனால் நெருக்கடியான இடங்களில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர திருப்பணி கரிசல்குளம் ரோடு பகுதியில் எதிரெதிரே வாகனங்கள் வரும் போது ரோட்டில் மட்டுமே கடந்து செல்ல போதிய இடம் இல்லாததால், வாகனங்கள் ரோட்டைவிட்டு கீழே இறங்கி செல்கின்றன. சமீபத்தில் பெய்த மழையால் ரோடு குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி விட்டது. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளா கின்றனர். இதுதவிர ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், ஒருசில நேரங்களில் பஸ் திருப்பணிகரிசல்குளம், துலுக்கர் குளம் வழியாக அபிஷேகப்பட்டி அருகே உள்ள துணை மின் நிலையம் எதிரே வந்து சேருகிறது. இதனால் நேரமும், எரிபொருளும் விரயம் ஆகிறது. எனவே குழாய் பதிக்கும் பணியை விரைவு படுத்தி போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டை நகர மக்கள் படும் சிரமங்களை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாலை அகலப்படுத்தப்படுமா?
நெல்லை மாநகரை பொறுத்தவரை பெருகி வரும் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சாலை வசதி இல்லாத நகரமாகவே உள்ளது. நெல்லை பேட்டையில் ஒரு சில இடங்களில் ஒரு பஸ் மட்டுமே செல்லும் அளவுக்கு ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. சில இடங்களில் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும். ரோட்டின் இருபுறமும் உள்ள நிலத்தை கையகப்படுத்தி அதில் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இதுதொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. குழாய்கள் பதிக்கும் பணி முடிந்த பிறகாவது, பேட்டை நகரில் உள்ள சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது மாற்று வழியில் அகலமான சாலை அமைக்கப்படுமா? என்பது பேட்டை நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Tags :
Next Story