காதல் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு ஐகோர்ட்டு உத்தரவு
காதல் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல், வக்கீல். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சரண்யாவை அவரது குடும்பத்தினர் மிரட்டுவதாகவும், எனவே தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் முருகவேல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரர் மற்றும் அவரது மனைவிக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story