ஜெபக்கூடம் சூறை; போதகர் உள்பட 4 பேர் படுகாயம் 6 பேர் கைது
பெரியநாயக்கன்பாளையத்தில் ஜெபக்கூடம் சூறை இதில் போதகர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர், இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடிகரை,
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பிரிவு பகுதியில் அங்காளம்மாள் நகர் உள்ளது. இந்த பகுதியில் அனுமதியின்றி ஜெபக்கூடம் கட்டப்பட்டு உள்ளதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுஇறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த கட்டிடத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என்று கோவை வடக்கு தாசில்தார் நேரில் சென்று கூறிவந்தார்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை இந்த ஜெபக்கூடத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது ஜெபக்கூடத்தை சேர்ந்தவர்களுக்கும்,அங்கு திரண்டு இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். ஜெபக்கூடத்தில் இருந்த கீபோர்டு, மேஜை, நாற்காலி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தில் போதகர் கார்த்திக் (வயது 31), அருண்குமார் (28), சுசிலா (52) மற்றும் ரேரூபகா (48) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, பெரியநாயக்கன்பாளையம் (பொறுப்பு) துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.இரு தரப்பினரிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சசிகுமார், செல்வம், சந்திரசேகர், கவிதா மற்றும் வினோத்குமார், ஜெயதேவ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
படுகாயம் அடைந்த 4 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட வினோத்குமார், ஜெயதேவ் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி ஜெபக்கூட ஆதரவாளர்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story