வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்: ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் திடீர் சாலை மறியல்


வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்: ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Dec 2017 5:45 AM IST (Updated: 10 Dec 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது பெயர் வாக்காளர் பட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

பெரம்பூர்,

கொடுங்கையூர் ஏழில் நகர் பி.பிளாக், எம்.ஜி.ஆர் நகர், 
அன்னைசத்தியா நகர் ஆகிய பகுதிகள் இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். 

இங்கு வசிக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வருவதாகவும், ஆனால் இந்த இடைத்தேர்தலில் தங்களது பெயர் வாக்காளர் பட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று எழில்நகர்–தண்டையார்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை காண்பித்தவாறு போராட்டத்தில் குதித்தனர்.

 இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்–இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னார் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story