பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி. கால்வாய்க்குள் கார் பாய்ந்தது; 3 வாலிபர்கள் பலி
பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி. கால்வாய்க்குள் கார் பாய்ந்த விபத்தில் 3 வாலிபர்கள் பலியானார்கள். மூணாறுக்கு சுற்றுலா சென்று விட்டு ஊருக்கு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
பொள்ளாச்சி,
கேரள மாநிலம் எர்ணா குளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆல்பா(வயது 19), ஜிதின் ஜோய் (24), லிஜோ(27), அமல்(21), ஜாக்சன்(21). இதில் ஜிதின் ஜோயும், லிஜோவும் குவைத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர். விடுமுறைக்காக சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் விடுமுறையை கொண்டாட தனது நண்பர்கள் ஆல்பா, அமல், ஜாக்சனுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த 7-ந் தேதி நண்பர்கள் 5 பேரும் ஒரு காரில் சுற்றுலா புறப்பட்டனர். பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு கடைசியாக மூணாறுக்கு சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். சுற்றுலா தலங்களுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதன் பிறகு அவர்கள் பொள்ளாச்சி வழியாக எர்ணாகுளத்துக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு மூணாறில் இருந்து நண்பர்கள் 5 பேரும் காரில் எர்ணாகுளத்துக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை ஜதின் ஜோய் ஓட்டினார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் கெடிமேடு என்ற இடத்தில் கார் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் கெடிமேட்டில் உள்ள பி.ஏ.பி. கால்வாய் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கால்வாய்க்குள் பாய்ந்தது.
பி.ஏ.பி. கால்வாயில் 11 அடிக்கு தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. கார் கால்வாய்க்குள் பாய்ந்த வேகத்தில் கதவு ஓரத்தில் இருந்த ஆல்பாவும், லிஜோவும் தண்ணீரில் விழுந்தனர். மற்ற 3 பேரும் காருக்குள் சிக்கி கொண்டனர். கார் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. லிஜோ தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். ஆல்பா அரைகுறை நீச்சலுடன் கால்வாய் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தார்.
இதற்கிடையே மன்னார்குடி நீடாமங்கலத்தை சேர்ந்த பால்டேங்கர் லாரி டிரைவர் கார்த்திகேயன் என்பவர் கால்வாயில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார். அப்போது கார் விழுந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் தண்ணீரில் தத்தளித்த ஆல்பாவை மீட்டு கரைக்கு இழுத்து வந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையே மீட்கப்பட்ட ஆல்பாவை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு வீரர்கள் காலை 7.30 மணி அளவில் காரை மீட்பதற்காக கயிறு மற்றும் ஏணி மூலம் கால்வாயில் இறங்கி தேட தொடங்கினர்.
அப்போது கார் விழுந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் மூழ்கி இருந்ததை கண்டுபிடித்தனர். திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. கால்வாய்க்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் காரை மீட்கும் பணி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. அந்த கிரேன் மூலம் கார் காலை 10.30 மணியளவில் வெளியே தூக்கப்பட்டது. காருக்குள் ஜிதின்ஜோய், அமல், ஜாக்சன் ஆகியோர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இறந்த 3 பேரையும் ஆல்பா அடையாளம் காட்டினார். இதற்கிடையே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட லிஜோவை தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். அவர் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பலியானாரா? அல்லது நீச்சல் அடித்து கரையில் ஏறி தப்பினாரா? என்று தெரியவில்லை.

Related Tags :
Next Story