வைகை ஆற்றில் மாயமான வாலிபர் உடல் மீட்பு மற்றொருவரை தேடும் பணி தீவிரம்
சோழவந்தான் அருகே வைகையாற்றில் மாயமான வாலிபரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மற்றொருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வைகையாற்றின் தடுப்பணை பகுதியில் கடந்த 8-ந்தேதி மாலை எம்.புதுப்பட்டியை சேர்ந்த சுரேஷ், பிரபு ஆகியோர் தங்களது நண்பர் மணிகண்டன் என்பவருடன் குளித்து கொண்டிருந்த னர். அப்போது அவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் மணிகண்டன் உயிர் தப்பி கரையேறினார். சுரேஷ், பிரபு ஆகிய இருவரும் வெள்ளத்தில் சிக்கி மாயமானார்கள். இவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று தடுப்பணையில் இருந்து சிறிது தொலைவில் சுரேஷ் என்பவரின் உடல் மீட்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு மாணிக்கம் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அரசு நிவாரண தொகை கிடைக்க பரிந்துரை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது தாசில்தார் பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் அழகுகுமார், தொழிலதிபர் முனியசாமி, தீயணைப்பு நிலைய அலுவலர் பெரிய அடக்கன், ஜெயராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸி சோபியாபாய் உள்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து மாயமான பிரபுவை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story