விஷ மாத்திரை தின்று இளம்பெண் தற்கொலை திருமணமான 9 மாதத்தில் பரிதாபம்
திருப்பூரில் குடும்ப பிரச்சினை காரணமாக விஷ மாத்திரை தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். திருமணமான 9 மாதத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
திருப்பூர்,
திருப்பூர் புஷ்பா நகரை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது 48). இவருடைய மகள் அங்காள அபிராமி(23). இவருக்கும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுப்பையா நகரை சேர்ந்த விக்னேஷ் மணி(30) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. விக்னேஷ் மணி கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது அங்காள அபிராமிக்கு அவருடைய பெற்றோர் 50 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ஒரு மொபட் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திருமணம் முடிந்து அங்காள அபிராமி தனது கணவர் வீட்டில் 3 மாதங்கள் வசித்து வந்தார். பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்காள அபிராமி திருப்பூர் புஷ்பா நகரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
மேலும் குடும்ப பிரச்சினை தொடர்பாக திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்திலும் அங்காள அபிராமி புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷ் மணி தனது மனைவியை தன்னுடன் அழைத்துச்சென்று வாழ்வதாக கூறி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அங்காள அபிராமி தனது கணவருடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. அதன்பின்னர் வீட்டில் இருந்த அங்காள அபிராமி விஷ மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார். உடனடியாக அவருடைய வீட்டினர் அங்காள அபிராமியை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
பின்னர் அங்காள அபிராமியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உறவினர்களிடம் அங்காள அபிராமியின் உடலை வாங்கிச்செல்லுமாறு ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அங்காள அபிராமியின் சாவுக்கு அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர்தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால்தான் நாங்கள் அங்காள அபிராமியின் உடலை வாங்கிச்செல்வோம் என்று உடலை வாங்கிச்செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் சம்பவம் நடந்தது திருப்பூர் என்பதால், திருப்பூர் போலீசாரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய அங்காள அபிராமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்காள அபிராமியின் உடலை வாங்கிச்சென்றனர்.
இது குறித்து திருவேங்கடம் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் சாம் ஆல்பர்ட் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அங்காள அபிராமி வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 9 மாதத்திலேயே அங்காள அபிராமி இறந்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

Related Tags :
Next Story