கடலூரில் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயற்சி; சாலை மறியல் 100 பேர் கைது
கடலூரில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை தொடர்ந்து விமர்சித்து வருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அந்த கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் கடலூர் உழவர் சந்தை அருகில் உள்ள சிக்னல் அருகே திரண்டனர். அப்போது கட்சி தொண்டர் ஒருவர், எச்.ராஜாவின் உருவபொம்மையுடன் வேகமாக அங்கே ஓடோடி வந்து எரிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் எச்.ராஜா உருவபொம்மையை பறித்தனர்.
இதில் ஆத்திரம் அடைந்த கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கடலூர்-புதுச்சேரி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இங்கே போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்றனர். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநில துணை செயலாளர் ஸ்ரீதர், நகர செயலாளர் ராஜதுரை, மாநில பேச்சாளர் புரட்சி கதிர், நகர துணை செயலாளர்கள் மகி, வரதன், குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் பரா முரளி உள்பட 100 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.இது குறித்து மாநில துணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை பற்றி தொடர்ந்து விமர்சித்து வரும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, திருமாவளவனின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவித்து கைதாகியுள்ள இந்து முன்னேற்ற கழக நிறுவனர் கோபிநாத் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது என்றார்.

Related Tags :
Next Story