விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
குடிசைப்பகுதிகள் அகற்றப்படுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை,
சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகளை அகற்றி வரும் தமிழக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையை தூய்மை படுத்துகிறோம் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிசைகளை தமிழக அரசு அகற்றி, அதில் நீண்ட காலமாக வசித்து வந்த மக்களை வெகு தொலைவில் மறு குடியமர்வு செய்துள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மறு குடியமர்த்தப்பட்ட கண்ணகி நகர், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு இதுவரை அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.
இதனால் அந்த குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் அந்நிய நாட்டு அகதிகள் போல் வாழ்ந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தை காரணம் காட்டி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் நதிகரையோரம் உள்ள குடிசைகளை அகற்றி வரும் தமிழக அரசு அந்த பகுதிகளில் உள்ள அரசு, தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டிடங்களை அகற்றவில்லை. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்பு ஆயிரம்விளக்கு திடீர்நகர் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள குடிசைகளை அகற்றினார்கள்.
ஆனால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு கட்டிடங்களை இதுவரை அகற்றவில்லை. இது மிகவும் கண்டிக்கதக்கது. மேலும் பல்லவன் நகர், நெடுஞ்செழியன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசை பகுதிகளை அகற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை உடனே கைவிடவேண்டும். அவ்வாறு குடிசைகளை அகற்றும் பட்சத்தில், அங்கு வசித்து வரும் மக்களுக்கு அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க வேண்டும். மேலும் குடிசை பகுதிகளை அகற்றும் போது அதில் வசித்து வருபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story