கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியல் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்
கோவில்பட்டியில், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பண்ணைத்தோட்டம் தெருவில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது. இங்கு மது குடித்து விட்டு செல்லும் மதுபிரியர்களால், பொதுமக்களுக்கு அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவில் மது குடித்து விட்டு சென்ற ஒரு கும்பல், அருகில் உள்ள சரமாரி அம்மன் கோவில் தெருவில் சிலரை சோடா பாட்டிலால் தாக்கியது.
இதில் அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கருப்பசாமி (வயது 45), காமாட்சி மனைவி ஞானசீகம் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் அந்த கும்பல், அப்பகுதியை சேர்ந்த முத்தையா மனைவி முத்துமாரியின் ஓட்டு வீட்டையும் சேதப்படுத்தியது.
இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை அகற்றவும், பொதுமக்களை தாக்கியவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி, இரவில் சாலைமறியலுக்கு திரண்டனர். உடனே, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களை தாக்கியதாக கோவில்பட்டி மார்க்கெட் ரோட்டை சேர்ந்த ஆறுமுகதுரை மகன் ராஜதுரை (25), காளிராஜ் (21), சரவணன் (19), செல்வம் (22), செல்லத்துரை (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, நேற்று காலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி மெயின் ரோடு, மாதாங்கோவில் ரோடு சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பொதுமக்களை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விட்டனர். டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடுங்கள்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

Related Tags :
Next Story