ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கடையநல்லூர் சிறுமி பலியானார்.
கடையநல்லூர்,
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோவில் வடக்குத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் கலைச்செல்வி (வயது 5). இவளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமியின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பரிதாப சாவு
இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் கலைச்செல்வி பரிதாபமாக இறந்தாள்.
சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story