வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பானை -விறகுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பானை மற்றும் விறகுகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
பவானி பாவடி தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
பவானி அந்தியூர் பிரிவு பாவடி தெருவில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் அரசு இடத்தை ஆக்கிரமித்து தெருவின் முகப்பில் கற்களை நட்டு வைத்து இடையூறு செய்து வருகிறார்கள். இதனால் அந்த வழியாக ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது.
மேலும் குப்பை அள்ளும் நகராட்சி வாகனங்களும் இந்த வழியாக வரமுடியவில்லை. இதை காரணம் காட்டியே அவர்கள் எங்கள் பகுதியில் குப்பைகள் அள்ள சரியாக வருவதில்லை. எனவே தெருவின் முகப்பில் கற்களை நட்டுவைத்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வாகனங்கள் சென்று வர வழிவகை செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.
ஆப்பக்கூடல் அருகே உள்ள பெருந்தலையூர் வாணியர் வீதியை சேர்ந்த பெண்கள் தலையில் சமையல் பானையையும், இடுப்பில் விறகுகளுடனும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பானை -விறகுகளுடன் உள்ளே செல்லக்கூடாது. இவற்றை நீங்கள் இங்கு வைத்து விட்டு செல்லுங்கள் என்றனர். அதன் பின்னர் அவர்கள் பானை மற்றும் விறகுகளை வெளியில் வைத்துவிட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘நாங்கள் 11 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 4 தலைமுறைகளாக பெருந்தலையூர் வாணியர் வீதியில் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் பகுதியை தனியார் ஒருவர் காலி செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு -சித்தோடு ரோட்டில் கொங்கம்பாளையம் பகுதியில் ரோட்டின் நடுவில் உள்ள கான்கிரீட் தடுப்புகள் வளைவில் மட்டுமே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த ரோட்டில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்புகள் இருப்பதே தெரியவில்லை. எனவே கொங்கம்பாளையம் பகுதியில் கூடுதல் தடுப்புகள் வைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
தமிழ் மாநில காங்கிரசின் ஈரோடு 4-வது மண்டல பகுதி தலைவர் அன்புதம்பி கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் சுற்றித்திரியும் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட தெருநாய்களை பிடிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் செம்பன் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோட்டில் இருந்து தளவாய்ப்பேட்டை வரை செல்லும் அரசு பஸ்கள் கருக்குப்பாளையம் பிரிவு பகுதியில் நிற்காததால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே கருக்குப்பாளையம் பிரிவு பகுதியில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
பெருந்துறை அருகே உள்ள திங்களூர், தாண்டாக்கவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கொடுத்திருந்த மனுவில், ‘தாண்டாக்கவுண்டன்பாளையத்தில் பல்வேறு சாதி மக்கள் வசித்து வருகிறோம். இங்கு இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் தனிநபர் ஒருவர் கோவில் கட்டி வருகிறார். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே கோவில் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று கூறி இருந்தார்கள்.
இதேபோல் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு தலா ரூ.3 ஆயிரத்து 560 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும், 2 பேருக்கு தலா ரூ.4 ஆயிரத்து 560 மதிப்பிலான இஸ்திரி பெட்டிகளையும் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா வழங்கினார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாபு, மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

Related Tags :
Next Story