விபத்தில் முதியவர் சாவு: போலி காப்பீடு ஆவணம் வைத்திருந்ததால் 4 கார்களை உறவினர்கள் சிறைபிடித்தனர்
பெருந்துறை அருகே நடந்த விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவர் மீது மோதிய காரில் போலி காப்பீடு ஆவணம் இருந்ததால் அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் 4 கார்களை சிறைபிடித்தனர்.
ஈரோடு,
சென்னிமலை அருகே உள்ள முகாசிபிடாரியூர் கருக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி பழனியம்மாளை மொபட்டில் ஏற்றிக்கொண்டு விஜயமங்கலத்தில் உள்ள தனது மகளை பார்க்கச்சென்றார். இவரது மொபட் சிப்காட் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு கால் டாக்சி இவரது மொபட் மீது மோதியது.
இதில் ராமசாமி மற்றும் அவரது மனைவி படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ராமசாமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பழனியம்மாளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கால் டாக்சியில் இருந்த காப்பீடு ஆவணங்களை ராமசாமியின் உறவினர்கள் கைப்பற்றினர்.
அந்த ஆவணத்தில் வருகிற 2018-ம் ஆண்டு மே மாதம் வரை செல்லத்தக்கது என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனால் ராமசாமியின் உறவினர்கள் அந்த குறிப்பிட்ட காப்பீடு நிறுவனத்தில் விசாரித்தபோது அந்த காரின் காப்பீடு முடிந்து பல மாதங்கள் ஆகி இருந்ததும், அதில் இருந்த தேதியை மாற்றி போலி காப்பீடு ஆவணம் வைத்து இருந்ததும் தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமியின் உறவினர்கள் நேற்று மதியம் சம்பந்தப்பட்ட கால் டாக்சி நிறுவனத்தின் 4 கார்களை தனியார் ஆஸ்பத்திரியின் முன்பு சிறைபிடித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மற்றும் கால் டாக்சி நிறுவனத்தினர் இங்கு வரவேண்டும்.
மேலும் காப்பீட்டை புதுப்பிக்காமல் போலியாக ஆவணம் தயார் செய்து காரை இயக்கியதற்கு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறினர். அதற்கு போலீசார், ‘இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நீங்கள் சிறைபிடித்து உள்ள கார்களை விடுவியுங்கள்’ என்று கூறினர். அதை ஏற்றுக்கொண்ட ராமசாமியின் உறவினர்கள் அந்த 4 கார்களையும் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story