பட்டிவீரன்பட்டி பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்


பட்டிவீரன்பட்டி பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
x
தினத்தந்தி 12 Dec 2017 4:15 AM IST (Updated: 12 Dec 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள எம்.வாடிப்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யன்கோட்டை, அய்யம்பாளையம், சித்தரேவு, சித்தையன்கோட்டை, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக இருக்கிறது. இந்த பகுதிகளில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக முறையாக பருவமழை பெய்யாததால் விவசாயம் பொய்த்து போனது. பச்சைப்பசேலென காட்சியளித்த வயல்வெளிகள் தரிசு நிலங் களாக மாறின. ஒரு சில பகுதிகளில், இருக்கிற தண்ணீரை வைத்து கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்தனர்.

இந்தநிலையில் இந்த ஆண்டு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் மருதாநதி அணை நிரம்பியது. மேலும் காமராஜர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இதன் காரணமாக குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து சொட்டாங்குளம், நரசிங்கபுரம் கண்மாய், வாடிகண்மாய், தாமரைக் குளம், சிறுவன்குளம் உள்ளிட்டவை நிரம்பின.

இதை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பச்சைப்பட்டு உடுத்தியது போல் வயல்வெளிகள் காட்சியளிக்கின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story