விமான ஆணையத்தில் வேலை
இந்திய விமான ஆணையத்தில் தீயணைப்பு சேவைக்கு இளநிலை உதவியாளர் பணிக்கு 170 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் தீயணைப்பு சேவைக்கு இளநிலை உதவியாளர் பணிக்கு 170 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், கோவாவைச் சேர்ந்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், பயர் போன்ற பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, டிரைவிங் திறன், உடல்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் www.aai.aero என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு 31-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Related Tags :
Next Story