எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழக நிறுவனமான இதில் தற்போது கிராஜூவேட் என்ஜினீயர் டிரெயினி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ‘எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட்’. இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழக நிறுவனமான இதில் தற்போது கிராஜூவேட் என்ஜினீயர் டிரெயினி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 66 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இ.சி.இ., இ.இ.இ., இ.அண்ட் ஐ., சி.எஸ்.இ., சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 30-11-2017-ந் தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணிகள் உள்ள என்ஜினீயரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்து குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதள வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-12-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://careers.ecil.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் கணினித் தேர்வு 7-1-2018 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story