மத்திய அரசு பணியில் சேர ஆசையா?
மத்திய அரசுத் துறையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் ஆண்டு தோறும் கணிசமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
தற்போது பள்ளி உயர்நிலைக் கல்வி (பிளஸ்-2) தரத்திலான தேர்வு மூலம், மத்திய அரசுத்துறைகளில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்றான ஸ்டாப் செலக்சன் கமிஷன், சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு துறையில் இளநிலை உதவியாளர், அஞ்சலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு 3 ஆயிரத்து 259 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
1-8-2018 தேதியில் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு பணித்திறன் தேர்வும் நடத்தப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம், வருகிற 18-12-2017-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. விண்ணப்பிக்கும்போது ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இளையதளம் வழியாகவும், ஸ்டேட் வங்கி வழியாகவும் கட்டணம் செலுத்தலாம். இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 4 முதல் 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. விரிவான விவரங்களை www.ssconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story